தென்னிந்திய நடிகர் சங்கம் 69-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் 21.09.2025 நடைபெற உள்ளது, கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல்

தென்னிந்திய நடிகர் சங்கம் 69-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் 21.09.2025 நடைபெற உள்ளது, கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல்

சென்னை ஹபிபுல்லா சாலை G1 நந்தா அடுக்ககம் பகுதியில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் (திசௌத் இந்தியன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன்) சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள உறுப்பினர்களுக்கு
69-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்திற்கு வருகை தர வேண்டும் எனக் கூறி அழைப்பிதழ் தபால் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,

அதில் செப்டம்பர் மாதம் 21.09.2025 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் சென்னை தோப்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நமது சங்கத்தின் 69வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் (2024-2025) கலந்து கொள்ள உங்களை உளமார்ந்த அன்புடன் அழைக்கிறோம். எங்கள் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அனைவரும் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் அலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1.தமிழ்த்தாய் வாழ்த்து

2. மறைந்த கலைஞர்களுக்கு நினைவஞ்சலி

3.வரவேற்புரை பொதுச் செயலாளர் திரு.விஷாம்.

4.2024 – 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தவர்க்கை செய்யப்பட்ட வரவு செய்வு கணக்குகளை வாரித்தல் துணைத்தலைர் திரு.கருணாஸ்.

5.2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வழக்கறிஞர் மற்றும் கணக்கு தணிக்கையாளர் நியமனம் செய்தல்.

Bismi

6.மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு 5 உறுப்பினர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கி சிறப்பித்தல்.

7. சங்கத் தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள் குறித்து விவாதித்தல்.

8.சங்கத்தில் புதிய கட்டிடம் மற்றும் நிதி நிலை குறித்த சிறப்புரை பொருளாளர் திரு.கார்த்தி

9.நிர்வாக செயல்பாடுகள், சங்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல், புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் நிர்வாகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த சிறப்புரை பொதுச்செயலாளர் திரு விஷால்.

10.தலைமை உரை தலைவர் திரு.நாசர்.

11.பேரவை கூட்டத்தின் தீர்மானங்களுக்கு பேரவையின் ஒப்புதல் பெறுதல்.

12.நன்றியுரை துணைத்தலைவர் திரு.பூச்சி.S.முருகன்.

13.நாட்டுப்பண்

போன்ற நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற உள்ளது சங்க உறுப்பினர் புத்தகம் வைத்திருப்பவர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது, மேலும் சங்க கூட்டத்தில் பல பிரபல நடிகர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொள்வதால் அதற்கு தகுந்த பாதுகாப்புடன், மதிய உணவு ஏற்பாட்டுடன் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது,

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்