- Advertisement -

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்!

- Advertisement -

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9 to 10.00 மணிக்குள் தலா 75 கிலோ என 150 கிலோ எடையில் கொழுக்கட்டைகள் கொண்டு நைவேத்தியம் செய்யப்பட்டது.

Bismi

இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு கோயிலின் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள் கொழுக்கட்டையை தொழில் சுமந்தபடி எடுத்துச் சென்று சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன் பிறகு கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்