மகனின் மரணத்தில் மர்மம் – உரிய விசாரணை நடத்த வேண்டி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார் மனு
மகனின் மரணத்தில் மர்மம் – உரிய விசாரணை நடத்த வேண்டி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார் மனு

திருச்சி மாவட்டம், லால்குடி, மருதூர், மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திரா காந்தி. இவர் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்.,

எனது கணவர் பன்னீர்செல்வம் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகன் மூவேந்தன்(31) ஆவார். எனது மூத்த மகள் உதயாவிற்கு திருமணமாகிவிட்டது. எனது ஒரே மகன் மூவேந்தனுக்கு கரூர் மாவட்டம் பரளி கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
எனது மகன் பெயிண்டராக வேலை செய்து வருகிறான். அதனால் வெளியூர் சென்று வருவது வழக்கம்.

வீட்டில் அருகிலேயே தான் குடியிருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. எனது மருமகள் சுஜாதா அடிக்கடி இரவு நேரத்தில் போன் பேசுவதை என் மகன் மூவேந்தன் கண்டிப்பாகதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் சுஜாதா மீண்டும் கர்ப்பம் தரித்ததால் மருத்துவ பரிசோதனைக்கு கடந்த 2025 பிப்ரவரி 24ஆம் தேதி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது சுஜாதா யாருடனோ வீடியோ காலில் பேசி இருப்பதை பார்த்த மூவேந்தன் கண்டித்துள்ளார். இது குறித்த தகவலை எங்களிடம் தெரிவித்ததும், குழந்தை பிறக்கட்டும் பிறகு பேசிக் கொள்ளலாம் என சமாதானப்படுத்தினேன்.


இந்நிலையில் கடந்த 2025 பிப்ரவரி 28 தேதி எனது மகன் மூவேந்தன் சமயபுரத்திலிருந்து மருதூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது தானே கீழே விழுந்து அடிபட்டு கிடப்பதாக தகவல் வந்தது. அப்போது நேரில் சென்று நாங்கள் பார்த்தபோது தலை மற்றும் கை கால் பகுதியில் காயம் இருந்தது. பின்னர் எனது மகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். என் மகன் அடிபட்டதாக சொல்லப்படும் மருதூர் சாலை எவ்வித மோட்டார் வாகனங்களும் அடிக்கடி செல்லாது. மேலும் எனது மகன் வேகமாக வாகனத்தை இயக்க மாட்டான். நடு தலையில் வெட்டு காயம், வலது கையில் வெட்டு காயம் கீழே விழுந்து ஏற்பட வாய்ப்பு இல்லை. என் மகன் துன்புறுத்தப்பட்டு அடித்து வெட்டி கொல்லப்பட்டுள்ளான். ஆனால் சமயபுரம் காவல் நிலையத்தில் இச்சம்பவத்தை சாலை விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனது மருமகள் சுஜாதா சமயபுரம் மகாலிகுடியை சேர்ந்த நபர் ஒருவருடன் இன்று வரை தொடர்பில் இருப்பதாக தெரிய வருகிறது. மேலும் எனது மருமகள் சுஜாதா இரண்டாவதாக பிறந்த குழந்தை மகாலிக்குடியை சேர்ந்த அந்த நபருக்கு தான் பிறந்தது என பகிரங்கமாக கூறுகிறார். எனவே எனது மகன் மூவேந்தன் இறப்பில் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவன் சாலை விபத்தில் இறக்கவில்லை எனது மருமகள் சுஜாதா மற்றும் மகாலிகுடியை சேர்ந்த நபர் இடையே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததினால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து என் மகன் இறப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பேட்டி…
1.இந்திரா காந்தி,
உயிரிழந்த மூவேந்தன் தாயார்.
2.விஜய்,
உயிரிழந்த மூவேந்தன்,
உறவினர்.





Comments are closed.