திமுகவினர் தமிழர், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் உதடு அசைவு மட்டுமே மனதளவில் எதுவும் கிடையாது – ஹெச்.ராஜா திருச்சியில் பேட்டி!

திமுகவினர் தமிழர், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் உதடு அசைவு மட்டுமே மனதளவில் எதுவும் கிடையாது – ஹெச்.ராஜா திருச்சியில் பேட்டி!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பிறகு, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினர் தமிழர், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் உதடு அசைவு மட்டுமே மனதளவில் எதுவும் கிடையாது. திமுகவினருக்கு தமிழ் பற்றி அக்கரை இல்லை. ராஜா சபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்.

Bismi

தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்தும், அவர்கள் பணியை நிரந்தரமாக ஆக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் பட்டியலின சமுதாய மக்களுக்கு ஆதரவாக இல்லை என்று தெரிகிறது. தூய்மை பணியாளர்கள் அனைவரும் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். திமுகவினர் தனியாருக்கு தாரை வார்த்ததால் தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். எத்தனை பேரின் வைத்து எரிச்சலை திமுகவினர் கொட்டிக் கொண்டார்களோ என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நாளை மறுநாள் அமித்ஷா திருநெல்வேலி வருகை தர உள்ளார். அதனை தொடர்ந்து பாரதிய பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருவார்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை செய்தவர்கள், தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் ஒருவரையாவது தமிழ்நாடு அரசு கைது செய்து உள்ளார்களா எனகேள்வி எழுப்பினார். ஆகையால் தான் குற்றங்களை தடுப்பதற்கு NIA சோதனை நடைபெறுகிறது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்