- Advertisement -

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

- Advertisement -

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில், டாக்டர்.ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

 

டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் …

Vagai

தமிழ்நாட்டில் ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஆணவ படுகொலைக்கு காரணமான சமூக சூழலை கண்டறிந்து அதனை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். சதிவெறிக்கு எதிராக,பள்ளி கல்லூரிகளில் மனித பண்பை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கவின் ஆணவ படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

 

Bismi

திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்கள் பிரச்சாரம் செய்த கொள்கைகளில் இருந்து நீண்ட தூரம் விலகி சென்று விடுகிறார்கள். பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொலைகள் அதிகரித்துவருகிறது.

 

திமுக – அதிமுக இகிய இரண்டு கட்சிகளும், ஆட்சியில் இருக்கும் போது தங்களது அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர் என சாதியின் அடிப்படையில் தேர்வு செய்யும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 

ஆட்சி அதிகாரம் தங்களுக்கு துணை நிற்கும் என்ற துணிவுடன் ஆணவக் கொலைகளில் ஈடுபடுகிறார்கள்.

 

இத்தகைய கொலைகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

 

இந்தியாவில் சாதியும் ஒழிய வேண்டும். சாதி வெறியும் ஒழிய வேண்டும். சாதி ஆணவ படுகொலை செய்பவர்களை விசாரணை செய்து, நீதிமன்றம் விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.

 

அதிமுக – திமுக ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான பிரச்சாரத்திற்கும், தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்