- Advertisement -

திருச்சி மேல்நிலை தொட்டி குழாயில் வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் – சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார்

0

- Advertisement -

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.
இங்கிருந்து வரக்கூடிய வால்வு குழாயில் கேபிஎன் டிராவல்ஸ் எதிரில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது சம்பந்தமாக அங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீணாக விரையம் ஆகும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

Bismi


திருச்சி மாநகர பகுதியில அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிற நிலையில் இந்த வால்வில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருவி போல செல்கிறது. அதிலே பலர் சிறுநீர் கழித்தும் தேவையற்ற பொருள்களை அதன் மீது வீசி செல்கிறார்கள். எனவே இதனால் பொதுமக்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பா இருக்கிறது.

Vagai


இந்த மழைக்காலங்களில் துரிதமாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகள் சீர்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்