- Advertisement -

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

0

- Advertisement -

திருச்சி மெயின்கார்டு கேட் தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இன்று (26.10.2)23) நடைபெற்ற விழா நிகழ்வில் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, விழாப் பேருரையாற்றினார்.

தமிழ்நாடு மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கல்வி சாரா செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் வண்ணம் தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை முன்னிருத்தி அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கலை சார்ந்த செயல்பாடுகளை வெளிக் கொணரும் வண்ணம் கலைத் திருவிழா 2023 என்ற நிகழ்வை இரண்டவாது வருடமாக தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.

Bismi

பள்ளி அளவில் 74 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி அளவிலான போட்டிகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் 7 பள்ளிகளை மையங்களாய் கொண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. மாவட்ட அளவில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மொத்தம் 7 ஆயிரத்து 450 மாணவர்கள் கலந்து கொண்டு படைப்புகளை வழங்க இருக்கிறார்கள். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ/ மாணவியர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா செல்லும் அரிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கி தந்துள்ளது. பல்வேறு கலை வடிவங்களான ஓவியம், இசை, பாடல், நடனம், சிற்பக்கலை என மாணவர்கள் 26.10.2023 முதல் 28.10.2023 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பர்.
இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Vagai

இந்த கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் மையங்கள்

பிஷப் மேல்நிலைப்பள்ளி தெப்பக்குளம், மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி – உறையூர், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீரங்கம், இ.ரெ.மேல்நிலைப்பள்ளி அண்ணாசிலை, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கண்டோண்மென்ட், பிஷப் – ஹீபர் மேல்நிலைப்பள்ளி புத்தூர், புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெறும்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்