திருச்சி புறநகர் பகுதிகளில் சாராய ஊறல் அழிப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!

0

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திருவிழா காலங்களில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் (30.10.23) பச்சப்பெருமாள்பட்டி தங்க நகரில் வசித்து வரும் மாரப்பன் மகன் சாமிகண்ணு (60) என்பவரது வீட்டினை மதுவிளக்கு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படையினர் சோதனை செய்தனர்.

- Advertisement -

இதில் சட்டவிரோதமாக இருந்த 1050 லிட்டர் சாராயம் ஊரல், விற்பனைக்காக வைத்திருந்த 30 லிட்டர் சாராயம், சாராயம் தயாரிக்க பயன்படும் ட்ரம் 2, நாட்டுச்சக்கரை 7 1/2 கிலோ, விற்பனைக்காக வைத்திருந்த 1 லிட்டர் அளவுள்ள சாராயம் பாட்டில்கள் – 60, சிலிண்டர் – 2, ஸ்டவ் – 1, சாராயம் ஊரல் போட பயன்படுத்தப்படும் 200 லிட்டர் அளவுள்ள பேரல் – 10, கடுக்கா கொட்டை – 1 கிலோ மற்றும் சுக்கு – 1/2 கிலோ ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படையினர்
கைப்பற்றினர். இதில் தொடர்புடைய சாமிகண்ணு தலைமறைவாக இருந்து வருகிறார். மேற்படி சாமிகண்ணுவை பற்றி விசாரணை செய்தபோது குக்கரை வெட்டி, ட்ரம்மை சீல் செய்து இவரே சாராயத்தினை தயார் செய்து விற்பனை செய்து வந்ததாகவும், மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாராயம் தயாரிக்கும் பொழுது குக்கர் வெடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக உள்ள சாமிக்கண்ணுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்