திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ,ஆர்ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

0

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ ஆர்ஐ ஆகியோரை  லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது  செய்தனர்.

- Advertisement -

மண்ணச்சநல்லூர் அருகே கீழகல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்  மாணிக்கம். இவர் தனது தந்தை நல்லையன் இறந்தது தொடர்பாக வாரிசு சான்றிதழ் கேட்டு மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக கல்பாளையம் VAOஇளவரசன் என்பவரும் மற்றும் RI முருகேசன் என்பவரும் ரூபாய் 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என மாணிக்கத்திடம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கம் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று  RI முருகேசனும் விஏஓ இளவரசனும்  மாணிக்கத்திடம் லஞ்ச பணம் பெற்ற போது கையும் களவுமாக பிடிப்பட்டனர்.பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த  லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்