திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்
துபாயிலிருந்து இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் தனது ஆசனவாயில் மறைத்து 995.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து 60 லட்சத்து 42ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கால் சட்டையில் மறைத்து கடத்திவரப்பட்ட 47 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்க பிஸ்கட் மற்றும் 94 கிராம் தங்க நகைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.