அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!
70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கியும் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேருரையாற்றினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் / செயலாட்சியர் அரசு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் அபிபுல்லா, துணை மேயர் திவ்யா, மண்டல குழுத்தலைவர் மதிவாணன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.