- Advertisement -

குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

0

- Advertisement -

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி “குழந்தைகளுக்கான நடை” எனும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் குழந்தைகள் வன்முறைக்கு எதிராகவும்,குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஓழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி மிளகு பாறை, மத்திய பேருந்து நிலையம் வழியாக சேவா சங்கம் பள்ளியில் நிறைவடைந்தது. மேலும் இப்பேரணியில் குழந்தைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் போது குழந்தைகள் மௌன நாடகம், சிலம்பம், கத்தி சண்டை, நிஞ்சா சாகசம் ஆகியவற்றை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்