தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பெரிய கடை வீதி உள்ளிட்ட வீதிகளில் அலை மோதும் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பெரிய கடை வீதி உள்ளிட்ட வீதிகளில் அலை மோதும் கூட்டம்


திருச்சியில் வர்த்தக மையமாக செயல்படக்கூடியது பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, சிங்காரத்தோப்பு பகுதிகள் ஆகும். எந்த பண்டிகையாக இருந்தாலும் திருச்சி மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் வாங்குவதற்கு இங்கு தான் வருகை புரிவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புத்தாடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் எந்தவித அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக கடைவீதிகள் முழுவதும் 1327 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தற்காலிக காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்ட தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிய ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர், தீபாவளி என்றாலே அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து தீபாவளி முன்னிட்டு புத்தாடை வாங்க வருகை தருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக மாலை ஆறு மணிக்கு மேலும் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்து வருகின்றனர்.


Comments are closed.