திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு சார்பில் மே தின பொதுக்கூட்டம்!
மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி எடத்தெரு அண்ணா சிலை பகுதியில் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் சி.ஐ.டி.யு சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் வே.நடராஜா, சிஐடியு மாவட்ட தலைவர் டி.சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் ஏஐடியுசி தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன், சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக ஏஐடியுசி தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் ஏ.அன்சர்தீன் நன்றி கூறினார்.