திருச்சி சேவா சங்கத்தின் 79-வது ஆண்டு விழா கோலாகலம்!

திருச்சி சேவா சங்கத்தின் 79-வது ஆண்டு விழா கோலாகலம்!
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள திருச்சி சேவா சங்கத்தின் 79-வது ஆண்டு விழா, 21.11.2026 சனிக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் சங்க வளாகத்தில் உள்ள காந்தி மன்றத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வரவேற்பும், ஆண்டறிக்கையும்:

விழாவின் தொடக்கத்தில் சங்கத்தின் தலைவி திருமதி. C. சரஸ்வதி அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
தொடர்ந்து, திருச்சி சேவா சங்கத்தின் ஆண்டறிக்கையைச் செயலர்
டாக்டர்.T. விமலா அவர்களும், சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டறிக்கையைப் பள்ளித் தலைமையாசிரியை
திருமதி. AL. நாகம்மை அவர்களும் வாசித்தனர்.
சாதனை மாணவியருக்குப் பரிசளிப்பு:
விழாவிற்குப் பள்ளிக்கல்வி இயக்குநர் டாக்டர். P.A. நரேஷ் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். 10-ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 12-ஆம் வகுப்பு (HSC) அரசுப் பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவியருக்கு வெள்ளிப் பதக்கம், தலா ₹10,500/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களையும், இரண்டாம் இடம் பெற்ற மாணவியருக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
மேலும், உருமு தனலெட்சுமி கல்லூரி முதல்வர் டாக்டர். E.R. ரவிசந்திரன் அவர்கள் கலந்துகொண்டு, அரசுப் பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவியருக்குச் சிறப்புப் பரிசுகள், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் & கலை நிகழ்ச்சிகள்:
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. ப. உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் திரு. மு. சாமிதுரை, தொடக்கக்கல்வி அலுவலர்கள் திரு. சு. சுரேஷ் மற்றும் திரு. மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திருமதி. கமலா பண்டாரி, திருமதி. சகுந்தலா சீனிவாசன், பொருளாளர் திருமதி. லெட்சுமி சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. ஜீவாசதாசிவம், டாக்டர். C.C. உமையாள், திருமதி. C. திலகவதி, நன்கொடையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் சியாமளா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. நிறைவாக, பள்ளிகளின் இணைச் செயலர் திருமதி. சு. சீதாலெட்சுமி அவர்கள் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
#TrichySevaSangam #79thAnnualDay #TrichyNews #EducationExcellence #GirlsEducation #SevaSangamSchool #TrichyEvents #StudentAchievements #திருச்சிசேவாசங்கம் #ஆண்டுவிழா #கல்விச்செய்திகள் #திருச்சி #மாணவியர்சாதனை





Comments are closed.