திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலில் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை நண்பர்கள் குழு சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி காவேரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து புனித நீர் தீர்த்த குடம் மூலம் கொண்டுவரப்பட்டு நேற்று முதலாம் யாகசாலை பூஜையும், இன்று இரண்டாம் யாக சாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் யாகசாலை பூஜையும் நடைபெற்று 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவிற்கு பக்தர்கள் அனைவரும் வருகை தர வேண்டுமென விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.