திருச்சி ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாட்டம்!
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச. 3 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகர் ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கே.கே.நகர் காவலர் திருமண மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாஸ்டர் குரூப் ஆப் நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகி பாத்திமா பதுல் மாலுக், அனைத்து மகளிர் நல சங்க முதல்வர் அல்லிராணி பாலாஜி, தொழிலதிபர் டாக்டர் பார்கவி ராஜா, இந்திய குழந்தை மருத்துவ குழுமத்தின் முதல்வர் டாக்டர் ராமநாதன், U2 ஸ்கேன் இயக்குநர் சாவித்ரி சிவக்குமார், திருச்சி பிளஸ் இயக்குநர் சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல உதவி அலுவலர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பல்வேறு சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ப்ரவாக் சிறப்பு பள்ளியின் நிறுவனர் சிந்து செய்திருந்தார்.