திருச்சி என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா!

0

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள கே.கள்ளிக்குடியில் என்.ஆர், ஐ.ஏ.எஸ் அகாடமி அமைந்துள்ளது. இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ -மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 21 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பாராட்டு விழா என்.ஆர், ஐ.ஏ.எஸ் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவானது இந்த கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற 44 வது வெற்றி விழா நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு அகாடமியின் இயக்குனர் ஆர்.விஜயாலயன் தலைமை வகித்து உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில்…

- Advertisement -

கால் பந்து வீரர் மெஸ்சி அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று சொல்வார்கள். ஆனால் போராடி உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அந்த கோப்பையுடன் நிம்மதியாக மெஸ்சி தூங்குகிறார். ஆகவே விடா முயற்சி தேவை. சிங்கம், புள்ளி மான், கருப்பு மான் இரண்டையும் இரையாக உண்ண நினைக்கிறது. முதலில் புள்ளி மானையும், பிறகு கருப்பு மானையும் உண்ண நினைக்கிறது. இரண்டும் ஓடி விடுகிறது. ஆகவே சிங்கம் புள்ளி மானை மட்டுமே குறி வைத்து துரத்தினால் மட்டுமே அது கிடைக்கும். அது மட்டுமல்ல எவ்வளவு தூரம் துரத்தினாலும் அதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடினால் மட்டுமே அதை பிடிக்க முடியும்.

அது போல எத்தனை வாய்ப்புகள் வந்தாலும் எந்த முடிவு எடுத்தாலும் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எத்தனை லட்சம் பேர் தேர்வு எழுதினாலும் அந்த அளவுக்கு நாம் படிக்க வேண்டும். குருப் 4, அடுத்தது குரூப் 2, தேர்வு எழுத வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும் நீங்களாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். யாரிடமும் தனி தனியாக விவாதிக்க கூடாது. அதை விட்டு விட வேண்டும். வெற்றி பெற வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மன வலிமை இருந்தால் உடம்பு அதை ஏற்றுக் கொள்ளும். ஆகவே தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.

வெற்றி பெற்றவர்களுக்காக வைரமுத்து தெளிவாக பாடியுள்ளார். சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும். தாய் தந்தை அன்புக்கும், தான் செய்த பண்புக்கும் பூமாலை காத்திருக்கும் என்று பாடியுள்ளார். முதன் முதலில் யாரும் வெற்றி பெற முடியாது. தொடர்ந்து பேராடினால் வெற்றி பெற முடியும். கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து வெற்றியாளராக மாற வேண்டும்.

தற்போது குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்கள் கடுமையாக போராடி, போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி என் பேசினார். இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் குடும்பத்தின் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் கல்வியாளர்கள், சக மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்