டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம்பெற்ற திருச்சி கலைக்காவிரி கல்லூரி மாணவிகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

0

நாட்டின் 75 வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் திருச்சி கலைக்காவிரி கல்லூரி ஆதி நர்த்தகி குழுவை சேர்ந்த அரசி, ஜோவிட்டா, ஐரிஷ் நெல்சன், அர்ச்சனா, கீர்த்தனா ஆகிய 6 மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் குழு தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்தது.

Bismi

இந்நிலையில் கலை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் இன்று திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர். இவர்களுக்கு கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆரத்தி எடுத்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் சதீஷ் குமார், மோகன், ரவிச்சந்திரன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்