₹.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலப் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து அமைச்சர் நேரு ஆய்வு!

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த இடத்தில் பாலம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தற்போது அதனை அகற்றி புதிய பாலம் கட்டப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரூ.138 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணிக்கான கள ஆய்வு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானா வரை போக்குவரத்து மாற்றம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கள ஆய்வின் போது மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி மீனாட்சி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு,…

திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரயில்வே பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பணிகள் இன்னும் ஓரிரு நாளில் துவங்க உள்ள நிலையில் எடமலைப்பட்டி புதூரில் இருந்து வரும் வாகனங்கள், சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள், டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து காஜாநகர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும், அதற்காக சாலை அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுள்ளது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்