உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருச்சி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில், திருச்சியில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியை ஐ பவுண்டேசன் தலைவர் அர்ச்சனா தொடங்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீரழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பை பற்றி விளக்கினர்.

மேலும் ச‌ர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரை பாதிப்பு வரும் என்பதால், தொடக்கத்திலேயே உரிய சிகிச்சை பெற வேண்டும், உணவு கட்டுபாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி கல்லூரி மாணவ மாணவியர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Bismi

இந்த பேரணியானது கண்ட்டேன்மென்ட் பகுதியில் உள்ள ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளில் சென்று பின்னர் மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வயது பருவத்தை மிஞ்சி அனைத்து பருவத்திலும் நீரிழிவு நோய் என்பதை கருப்பொருளாக கொண்டு கடைப்பிடிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்