திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருணாச்சல மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு புதிய கோட்டத் தலைவர்களுக்கு உத்தரவு நகல் வழங்கி, பாராளுமன்ற தொகுதி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், முன்னால் ராணுவ அணி தலைவர் ராஜசேகரன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் புதிய கோட்டத் தலைவர்களாக ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், மார்க்கெட் சம்சுதீன், ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ், பாக்கியராஜ், வெங்கடேஷ் காந்தி, இஸ்மாயில், RG முரளி, JJ வின்சென்ட் , தர்மேஷ், எட்வின் ராஜ், கிருஷ்ணா, அழகர், பாலசுந்தர், கனகராஜ், மணிவேல் அண்ணாதுரை பொறுப்பேற்றனர்.