திருச்சியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் – மாநில பொதுச் செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன் பங்கேற்பு!

0

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருத மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞரணி தலைவர் காட்டூர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் பி. சந்தன பிரியா பசுபதி பாண்டியன் முன்னிலையில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி ஆதி ஆனந்த் ஆலோசித்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

Bismi

இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக திருச்சி O.M பாலா, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக திருச்சி சத்யா, திருச்சி மாவட்ட தலைவராக A.P குட்டி, திருவரம்பூர் ஒன்றிய செயலாளராக காட்டூர் சபரீஷ், மாநில மாணவரணி செயலாளராக பிரவீன், திருச்சி மாவட்ட மாணவர் அணி தலைவராக அரவானூர் நவீன், திருவரம்பூர் ஒன்றிய இளைஞரணி அமைப்புச் செயலாளராக கபிலன், திருவரங்கம் பகுதி செயலாளராக அகில், மாவட்ட பொறுப்பாளராக அரவானூர் கர்த்தர், கொரடாத்தோப்பு சீனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் எழில் நகர் ரஞ்சித், கல்நாயக் C.K ஆனந்த், குமரேசன், பஜார் மைதீன், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் கொடாப்பு ராஜா, அனல் அருண், மாந்துறை சதீஷ், பர்மா காலனி முனீஸ், மலைக்கோயில் விக்கி உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்