தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சியில் மரத்தாலான கரண்டித் தாங்கிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர் அலெக்ஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி மரத்தாலான கரண்டி தாங்கிகள் குறித்து பேசுகையில், ஆப்பக்கூடு என்ற மரத்தாலான கரண்டி தாங்கிகள் என்பது அடுப்படியில் மத்து, கரண்டி, துடுப்பு போன்ற பல கருவிகளை செருகி வைக்க பயன்படும் மர பலகையில் துளையிடப்பட்ட பலகையாகும். இது கரண்டிகள் மற்றும் பிற சமையலறைப் பொருட்களை தாங்கி நிற்கும் பலகையாகும். இது செட்டிநாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு பாரம்பரிய கைவினைப் பொருளாகும்.
இந்த மரத்தாலான கரண்டித் தாங்கிகள் நாகரிக உலகில் வழக்கொழிந்து விட்டன என்றார். முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சலேத் வரவேற்க, துணை ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார். பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் விஜயகுமார், முகமது சுபேர், சந்திரசேகரன், பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் தனது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர். கல்லூரி கல்விப்புல முதன்மையர், துறைத்தலைவர்கள் , பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளங்கலை முதுகலை மாணவ மாணவிகள் உட்பட பலர் கண்காட்சியினை பார்வையிட்டனர்.





Comments are closed.