- Advertisement -

பாலத்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

பாலத்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து, தமுமுக திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் பைஸ் அகமது MC, முகமது ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக பொது செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் உரையில், பெண்கள் குழந்தைகள், முதியவர்கள் என பாராபட்சம் பார்க்காமல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நிகழ்த்தும் கொடூர கொலையாளி நாடாக மாறிவிட்ட இஸ்ரேலை உலக நாடுகள் தனிமை படுத்த வேண்டும். பல்வேறு நாடுகள் தங்களின் கண்டனங்களை இஸ்ரேலுக்கு எதிராக தெரிவித்து வரும் நிலையில் ஒன்றிய மோடி அரசு இதுவரை இனப்படுகொலையை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு இசைக் கல்லூரியில் நடைபெற உள்ள இஸ்ரேலிய திரைப்பட விழாவை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என பேசினார்.

Vagai
Bismi

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
முஸ்லிம் மகளீர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, ஐபிபி மாநில துணை செயலாளர் முகமது ரபீக், SMI மாநில துணை செயலாளர் அப்பீஸ் கான், மாவட்ட பொருளாளர்கள் ஹுமாயூன் கபீர், காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர் கான் மற்றும் மண்டல செயலாளர்கள், மாவட்ட துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், மகளீர் பேரவை நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்