திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி – முன்னாள் நீதிபதி தொடங்கி வைத்தார்!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் “சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்” என்ற தலைப்பிலான ஓவியக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை முன்னாள் நீதிபதி சந்துரு தொடங்கி வைத்தார். முன்னதாக திருச்சி மாவட்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி ஓவியர் மனோகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 33 இளம் ஓவியர்கள் பங்கேற்பில், 133 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இக்கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை தூரிகை ஓவியத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். அதில், உயர் பண மதிப்பிழப்பு சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்பு சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம், கையால் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுவது தடைச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலன் சட்டம் என பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் காட்சிப்படுத்திருந்தனர். இந்த ஒவியக் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி கல்வி குழுத் தலைவர் பொற்கொடி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்