திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சி – ரசித்து பார்த்த பொதுமக்கள்!

திருச்சி ஸ்ரீரங்கம் கீழச்சித்திர வீதியில் 61ஆம் ஆண்டாக திருவோண மஹோத்ஸ நிகழ்ச்சி ஸ்ரீனிவாசபக்தகோடிகள் அமைப்பின் சார்பில் கடந்த 4ம்தேதி முதல் துவங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று சாரா விஜயராகவன் புல்லாங்குழல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகாலட்சுமி வயலின், மிருதங்கத்தை கிரிதர சீனிவாசன் ஆகியோர் வாசித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இசையை ரசித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைப்பின் நிர்வாகி கூறுகையில்,…

ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை புது புது ரசிகர்கள் வந்து ரசிக்கின்றனர். பல, பல வித்துவான்கள் இங்கு வந்து
நிகழ்ச்சியை நடத்தி தருகின்றனர். இந்த இடமும் துவராக மூலையில் வந்து உட்கார்ந்து நிகழ்ச்சி நடத்துகின்ற எந்த வித்வானாக இருந்தாலும் அவர்கள் சிகரத்தை தொடுகிறார்கள் என்பது அனுபவபூர்வமாக உண்மை என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மோகன் கூறுகையில்,…

Bismi

இன்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் சாரா விஜயராகவன் குடும்பத்தார் மூன்று தலைமுறையாக இசையில் வளர்ந்து வருகின்றனர்.
இவருடைய தாத்தா சடகோபன் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர் வீணை வாசிப்பார். இந்த நிகழ்வு கடந்த மூன்று தலைமுறையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்