திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டம் – தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
திருச்சி மன்னார்புரம் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் திருச்சி மாவட்ட தலைவர் காமராஜர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் ஊதிய உயர்வு வெளிப்படைத்தன்மையுடன் சங்கங்களை வகைப்பாடு செய்யாமல் லாப நட்டங்களை கணக்கில் கொள்ளாமல் 31.03.2018 ஆம் தேதி ஊதிய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்கள் 31.03.2023 ஆம் தேதி பெற்று வந்த சம்பளத்தின் மீது 20 % ஊதிய உயர்வு அனைவருக்கும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு பின்னர் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். தவணைத் தவறிய நகைக்கடன் உங்கள் ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட நட்டத்தை செயலாளர் தலையில் சுமத்தி ஓய்வு கால நிதி பயன்களில் பிடித்தம் செய்யப்பட்டு வருவது கைவிடப்படுவதுடன் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை திருப்பி வழங்கப்பட வேண்டும். தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூபாய் 1000 க்கு விற்பனை செய்து ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். மகளிர் பணி புரியும் இடங்களில் அவசியம் கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். விற்பனையாளர்களாக பணியில் சேர்பவர்களுக்கு தொகுப்பூதியம் இல்லாமல் காலம் வரை ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும், உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் காமராஜ் பேசியது..
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை மாநில அரசுக்கு கோரிக்கைகளை முன் வைத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை, தொடர்ந்து பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பணிபுரியக்கூடிய இடங்களில் அவர்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை.. உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தியும் தமிழ்நாடு அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஆகையால் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.


Comments are closed.