கனமழை, பெருங்காற்றால் சாய்ந்த வாழைப்பயிர்களை, நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்
கனமழை, பெருங்காற்றால் சாய்ந்த வாழைப்பயிர்களை, நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்


திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில், கனமழை மற்றும் பெருங்காற்றால் சாய்ந்த வாழைப்பயிர்களை, நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!
நெல்லை புறநகர் மாவட்டத்தில், கூனியூர், வடக்கு காருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, வடக்கு வீரவநல்லூர்-1, வடக்கு வீரவநல்லூர்-2, கிரியம்மாள் புரம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில், (அக்டோபர். 3) கனமழை பெய்ததுடன், பெருங்காற்றும் வீசியது.
இவற்றால், இவ்வூர்களில் பயிரிடப்பட்டிருந்த பணப்பயிரான வாழைப்பயிர்கள், பெருமளவில் சாய்ந்து விழுந்து, சேதம் அடைந்தன. இவ்வாறு, சுமார் 60ஆயிரம் வாழைகள் வரை, சேதம் அடைந்திருக்கலாம்!என, தெரியவருகிறது. கனமழை மற்றும் பெருங்காற்றினால், சாயந்த வாழைப்பயிர்கள் குறித்த, கணக்கெடுப்பு பணிகளை, தோட்டக்கலை துறையினரும், வருவாய்த் துறையினரும், உடனடியாக மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்துக்கு, விரைந்து வழங்கிடுமாறு, தோட்டக்கலைத்துறையினருக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சேரன்மகாதேவி வருவாய் வட்டாட்சியர் காஜா கரீபுன் நவாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உடனிருந்தனர்.


Comments are closed.