திருமயம் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரம் திருமயம் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராமசுப்புராம் தலைமையில், திருமயம் தொகுதி பொறுப்பாளர் இராம அர்ச்சுனன் முன்னிலையில், திருமயம் ஊராட்சி, மேலூர் ஊராட்சி, அரசம்பட்டி ஊராட்சி, கோட்டையூர் ஊராட்சி, இளஞ்சாவூர் ஊராட்சி, சேதுராபட்டி ஊராட்சி ஆகிய தெற்கு வட்டார கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு மற்றும் நகர வட்டார கிளை நிர்வாகிகள் மகளிர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் திருமயம் தொகுதி பொறுப்பாளரும் காங்கிரஸ் கட்சி கிளை நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் சந்தித்து உறுப்பினர் கார்டுகளை வழங்கி வருவது காங்கிரஸ் கட்சிக்கு வழுவை சேர்க்கின்ற வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புத்துணர்ச்சி வந்து கொண்டிருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றது


Comments are closed.