புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன தீர்மானம்!
சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!
புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன தீர்மானம்!
சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!
திருநெல்வேலி,டிசம்பர் 17:-
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள, “ஆதி- திராவிடர் மகாஜன சங்கம்” (A.D.M.S.) கூட்ட அரங்கில்,டிசம்பர்.17 மாலையில்,”புரட்சி பாரதம்” கட்சியின்,தென் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற”கலந்தாய்வு கூட்டம்”நடைபெற்றது. மாவட்ட செயலாளர் “களக்காடு”ஏ.கே.நெல்சன் தலைமையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் முன்னிலையும், வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், அனைவரையும் வரவேற்று பேசினார்.மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனுள்ள பல்வேறு ஆலோசனைகளை, வழங்கினார்.திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில், பட்டியல் சமூக மக்களுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.அத்துடன் அவர்களுக்கென, முறையான இடுகாடு வசதியை செய்துத்தர வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலச்செவல், கோபால சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில், முற்றிலும் சேதமடைந்த வாழைப் பயிர்களுக்காக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையினை, உடனடியாக வழங்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில், சட்ட விரோதமாக இயங்கிவரும் கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும். சட்டரீதியாக,நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் குழாய் போடுவதற்காக தோண்டப்பட்ட, அனைத்து சாலைகளையும், போர்க் கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்திட வேண்டும்!’ ஆகிய தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த”கலந்தாய்வு” கூட்டத்தில்,மாநில செயலாளர் “மிசா” பரணி மாரி, மாநில துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் கோபி, முருகேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட செயலாளர்கள் கன்னியாகுமாரி மேற்கு “ஒடுப்புரை” அருண், கன்னியாகுமாரி கிழக்கு மால்வின் சுவாமிநாதன், தூத்துக்குடி, மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், கன்னியாகுமாரி முன்னாள் மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் “புரட்சி பாரதம்” கட்சியினர் அதிக அளவில், கலந்து கொண்டனர், கூட்ட முடிவில், மாவட்ட பொருளாளர் முகம்மது காசீர், அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.