சமூக வலைதளங்களில் மிரட்டல் பதிவு வெளியிட்ட நபர் கைது!

0

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரவுடி துரை என்கிற துரைசாமி புதுக்கோட்டையில் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யபட்டு அண்மையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை இணைத்து பதிவேற்றம் செய்தனா். இது குறித்து விசாரணையில், புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ராஜபாண்டி (21) என்ற இளைஞா் அதை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேடப்பட்டு வந்த அவர் நேற்றைய தினம் திருச்சி குழுமணி சாலையில் ராமநாதநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்றபோது, அவா் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சோமரசம்பேட்டை போலீஸாா், அவரை பிடித்து 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்