கீரனூரில் பஸ் நிற்குமா அரசு பேருந்துகளில் கேட்டு கேட்டு சலிச்சு போன கீரனூர் மக்கள்

0

- Advertisement -

கீரனூரில் பஸ் நிற்குமா அரசு பேருந்துகளில் கேட்டு கேட்டு சலிச்சு போன கீரனூர் மக்கள்


திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் எண்ணற்ற பேருந்துகள் செல்கின்றன, ஆனால் ஒரு வண்டி கூட, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி மக்களை ஏற்றி சென்று, கீரனூர் பேருந்து நிலையத்தில் விட்டு செல்வதில்லை என்பதுதான் பயணிகளிடையே மிகப்பெரிய வருத்தம்,

- Advertisement -

பகல் நேரங்களில் முதலில் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் நபர்களை ஏற்றிவிட்டு தான் இறுதியாக வண்டி புறப்படும் நேரத்தில், அவசர அவசரமாக ஒரு சில பேருந்துகளில் மட்டும் கீரனூர் மக்களை ஏற்றி சென்று கீரனூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு செல்கின்றன, குறிப்பாக இரவு நேரங்களில் கீரனூர் பேருந்து நிலையத்திற்கு ஒரு வண்டி கூட செல்வதில்லை, எந்த பேருந்து கேட்டாலும் பைபாஸ் பைபாஸ் என்ற பதில் மட்டுமே கூறுகிறார்கள், என்று பயணம் செய்யும் பயணிகள் கூறுகின்றனர்,

இது போன்ற நிகழ்வு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு மிக ஆர்வமாக பஸ்ஸில் பயணம் செய்ய வரும் கீரனூர் பயணிகள், மிகுந்த மன வருத்தத்துடன் வேதனை அடைந்து, முகம் சுளிக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள், எனவே இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு வெகு விரைவில் சீர் செய்ய வேண்டும் என்று மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பயணம் செய்வதற்காக வந்த கீரனூர் மக்கள் மிகுந்த ஆதுங்கத்துடன் கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்