திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் ‘தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்’ என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் ‘தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்’ என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அறம் மனநல மருத்துவமனையில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் அவர்கள் தலைமையேற்று புத்தகத்தின் சிறப்பையும் அதன் நோக்கத்தை குறித்தும் மக்களுக்கு மனநலத்தைக் குறித்து எளிமையாக புரியும் வகையில் இப்புத்தகம் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறித்தும் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து திருச்சி மனநல மீளாய்வு மன்றத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான உயர்திரு பால ராஜமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு இதழை வெளியிட மற்ற சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ராக்போர்ட் நியூரோ மையத்தின் நிறுவனர் மருத்துவர் வேணி அவர்களும் எஸ் வி ஆர் குழுமத்தின் தலைவர் திரு முத்தையா அவர்களும் தமிழ்நாடு புக் டிரஸ்ட், மதுரை நிறுவனத்தின் இயக்குனர் திரு செல்வச்சாமி அவர்களும் அறம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவர் திருமதி.அஸர் நிஷா பேகம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் பல்துறை மருத்துவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு அறக்கட்டளை நிறுவனர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.