- Advertisement -

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைப்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்!

- Advertisement -

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைப்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க (டியூஜே)தலைவர் சுபாஷ் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க (டியூஜே) திருச்சி கிளை மாவட்ட கூட்டம்

Vagai

திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், சங்கம் குறித்து எடுத்துரைத்தார்.

தேசியக்குழு உறுப்பினர்கள் கே எஸ் சுப்பையா பாண்டியன், ஐயா எம்.டி. இராமலிங்கம், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் (டியூஜே) டி .எஸ் .ஆர். சுபாஷ் பேசுகையில், பத்திரிகையாளர்கள் நல வாரியம் பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வாரியத்தின் மூலம் செயல்படுத்துகிறது.

அத்திட்டம் அனைத்து பத்திரிகையாளர்களுக்குமானதாக அமைய வேண்டும்.

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் அனைவர்களின் குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டும்.

பத்திரிகை எத்தனை படிகள் விற்பனையாகிறது என்ற எண்ணிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர்களைப் பாகுபடுத்தக்கூடாது. அச்சு, காட்சி, இணையதளம் ஊடகத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பிழை திருத்துனர்கள், கணினி இயக்குபவர்கள் என பத்திரிகை அலுவல் சார் பணியாளர்கள் அனைவருக்கும் அங்கீகாரத்தை வழங்கவேண்டும்.

ஊடகவியலாளர்களது மாநாடுகளில், அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் தலைவர்கள் விடுக்கும் அறிக்கைகளில் இத்தகைய வாரியம் அமைப்பதற்கான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. ,

அந்த வேண்டுகோள்களை நடைமுறைப்படுத்த வேண்டும் .

இளம் பத்திரிகையாளர்கள் அனைவரும் தொழில்சார் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்க வேண்டும்.

கால மாற்றங்களுக்கு ஏற்ப, செய்திகளையும் கருத்துகளையும் வழங்குகிற ஊடகப் பணியில் ஈடுபட்டிருக்கிறவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.

Bismi

அவ்வப்போது பத்திரிகையாளர் நலம் குறித்து பேசப்பட்டு வந்தாலும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் உரியதாக வாரியம் அமையவில்லை.

பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் இந்த வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படவேண்டும்.

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்பநல உதவித்தொகை உயர்த்தப்பட வேண்டும்.

நலவாரிய உறுப்பினர்கள் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, அரசியல் சார்பற்றவராக நியமிக்கப்படவேண்டும்.

பெரும் நிறுவனங்களாகிவிட்ட ஊடகங்கள் முதல், சிறு அளவில் சுற்றிவரும் பத்திரிகைகள் வரையில் பணியாற்றுவோர் வாரியத்தின் நன்மைகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். நகர்ப்புறத்தில் இருந்து தாலுகா வரை உள்ள காலை நாளிதழ், மாலை நாளிதழ், வார இதழ், புலனாய்வு இதழ், மாத இதழ், பருவ இதழ், சிற்றிதழ் எனப்படும் ஏடுகள் என சமூக அக்கறையோடு வெளிவரும் அனைத்து அச்சு, காட்சி, இணையதள ஊடகத்தினர் அனைவரையும் அரவணைக்கிற பொறுப்பை ஏற்க வேண்டும். அப்போது ஊடகவியலாளர் சங்கங்கள் சிறப்பாகப் பங்களிக்க முடியும். ஆகவே அணுகுமுறைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் அந்தச் சங்கங்களின் கருத்துகளைப் பெறுவது வாரியத்திற்கு வலுச் சேர்க்கும்.

அதிகார மட்டத்தில் இருப்போருடனான தொடர்பும் செல்வாக்கும் மாறுவதில்லை. அதைப் பயன்படுத்தி வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறவர்கள் உண்டு,

தாலுகா அளவில் உள்ள, எளிய பத்திரிகையாளர்களும் வாரியத்தால் பயனடைய வேண்டும்.

அதற்கான முயற்சியினை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்

(டி.யு.ஜே) முன்னெடுக்கும்.

அரசும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், என்றார்.

செய்தியாளர்கள் வேல்முருகன், சங்கரராமன், புதுக்கோட்டை முரசொலி அண்ணாதுரை,

பொன்னேரி பாலகிருஷ்ணன்,

குகன்,வீரபாண்டி, மகேஸ்வரன்,

தாமோதரன், ரீகன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்