- Advertisement -

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து  காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

0

- Advertisement -

இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடி ஏற்றி மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, சமாதானத்தின் அடையாளமாக இரு வெண் புறாக்களை பறக்க விட்டார்.

Vagai

Bismi

இதனைத் தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து  நலத்திட்ட உதவிகளும்,  காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், 25ஆண்டுகள் மாசற்ற பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் மனோகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார்,  திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி
மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்