- Advertisement -

பொங்கலுக்கு ₹.5 ஆயிரம் போனஸ் வழங்கக் கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது

0
Bismi

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்குவது போல், தமிழகத்திலும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க கோரி கடந்த அக்டோபர் மாதம் கட்டுமான தொழிலாளர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தீபாவளிக்கு போனஸ் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க கோரி நேற்று தமிழக முதல்-அமைச்சருக்கு கட்டுமான தொழிலாளர்கள் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் முத்தழகு, துரைராஜ், இருதயராஜ், முத்துலட்சுமி, துணை செயலாளர்கள் மருதாம்பாள், சுமதி, தேசிய குழு உறுப்பினர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்