- Advertisement -

தமிழக மின் கட்டமைப்பு மேம்பாடு: ₹15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்; 15,058 பணியாளர்கள் நியமனம் – முதல்வர் அதிரடி உத்தரவு!

- Advertisement -

தமிழக மின் கட்டமைப்பு மேம்பாடு: ₹15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்; 15,058 பணியாளர்கள் நியமனம் – முதல்வர் அதிரடி உத்தரவு!

​சென்னை:

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (16.06.2026) தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறை சார்ந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோரின் நலன் கருதி பல்வேறு அதிரடி உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.

Vagai

​📈 உள்கட்டமைப்பு மற்றும் புதிய திட்டங்கள்:

​₹15,032 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

​சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த சுமார் ₹2,275 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

​மாநிலம் முழுவதும் ₹10,109 கோடி செலவில் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் தற்பொழுது அமைக்கப்பட்டு வருகின்றன.

​🛠️ விரைவான குறைதீர்ப்பு மற்றும் புதிய வசதிகள்:

​மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தவும், மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்யவும் பின்வரும் புதிய குழுக்கள் மற்றும் வாகனங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன:

​77 புதிய மின் தடை நீக்க (Fuse-Off Call) மையங்கள்

Bismi

​7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள் மற்றும் 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள்

​10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள்

​☎️ 24 மணி நேர சேவை: பொதுமக்கள் தங்களின் மின் குறைபாடுகளை ‘மின்னகம்’ (9498794987) மூலம் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகப் பதிவு செய்து தீர்வு காணலாம். விரைவில் இச்சேவை வாட்ஸ்அப் (WhatsApp) புகார் மேலாண்மை அமைப்புடனும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

​🧑‍ொழிலாளர்கள் நியமனம் மற்றும் ரோந்துப் பணி:

​மின் பழுதுகளை உடனுக்குடன் சீர்செய்ய தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி உடனடியாக நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

​மின் தளவாடப் பொருட்களை உடனடியாகக் கொள்முதல் செய்து, பணியாளர்களை சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​சென்னையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்கள் அவசரப் பணிகளுக்காகப் புகார் பெறப்படும் இடங்களுக்கு உடனுக்குடன் சென்று பழுதுகளைச் சரிசெய்ய தீவிரமாகச் செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

​🌿 எதிர்காலத் திட்டம்:

​மாநிலத்தில் தற்பொழுது மின்சாரப் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றாலும், அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்கொள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems), புதிய அனல்மின் நிலையம் மற்றும் நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

​இக்கூட்டத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

​#TamilNadu #TNEB #TANGEDCO #TNGovt #ElectricityBoard #Minnagam #TamilNaduNews #TNPowerUpdate

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்