தமிழக கிரிக்கெட் அணி தோல்வி-ரஞ்சி கோப்பை.
தமிழக கிரிக்கெட் அணி தோல்வி-ரஞ்சி கோப்பை.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – ஆந்திரா அணிகள் இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 182 ரன்களும், ஆந்திரா 177 ரன்களும் எடுத்தன. 5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 29 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 70.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் -29, கேப்டன் சாய் கிஷோர்-16, பாபா இந்திரஜித் -6, ஆந்த்ரே சித்தார்த் -33, சோனு யாதவ் -28, வித்யூத் -2, திரிலோக் நாக் -3 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆந்திர அணி சார்பில் சவுரப் குமார்-4, திரிபூர்ண விஜய் -2, பிரித்வி ராஜ் -2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆந்திர அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அபிஷேக் ரெட்டி -75 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் கரண் ஷிண்டே -64 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். அஸ்வின் ஹெப்பார்-21, கலிதிண்டி ராஜு -20 ரன்கள் சேர்த்தனர்.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆந்திர அணிக்கு முழுமையாக 6 புள்ளிகள் கிடைத்தன. தமிழக அணிக்கு நடப்பு தொடரில் இது 2-வது தோல்வியாக அமைந்தது. 2 ஆட்டங்களை டிரா செய்திருந்தது.இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழக அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.


Comments are closed.