கண்களை கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில் 600 கணக்குகளுக்கு மனக்கணிதம் மூலம் தீர்வு கண்ட மாணவர்கள் – உலக சாதனை!

ஜி ஜோன் அபாகஸ் மாஸ்டர்ஸ் குழுமம் சார்பில், கண்களை கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில் 600 கணக்குகளை மனக்கணிதம் மூலம் தீர்க்கும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி வயலூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அபாகஸ் பயிற்சிபெற்ற 265 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களது கண்களை கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில் 600 கணக்குகளுக்கு மனக்கணிதம் மூலம் விடை கண்டனர். இதுவரையிலும் இந்த சாதனையானது உலகில் எவராலும் நிகழ்த்தப்படாத நிலையில், செபி உலக சாதனை புத்தகம் மற்றும், அகில இந்திய உலகசாதனை புத்தகத்தில் இந்த சாதனை இடம்பெற உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கணிதத்தில் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் படிப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திடவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியும் என உறுதிப்பட தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்