தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க மாணவர்கள் அனைவரும் ஒரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும் – திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை
திருச்சி TVS டோல்கெட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் 75 வது பவளவிழா ஆண்டின் துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட Global Jamalians Block கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும் சிறுபான்மை உரிமைக்காக்கும் தகைசால் திராவிட நாயகன் என்ற விருத்தினை கல்லூரி நிர்வாகம் சார்பாக முதல்வருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி செழியன்,
டி ஆர் பி ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது :
நான் முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வு கூட்டங்கள் என்று ஓய்வு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை போன்ற இளைஞர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்குள் எனர்ஜியை அதிகரிக்கிறது. எப்போதும் மாணவர்கள் அதிகமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு நான் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பேன்.
இந்தக் கல்லூரி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக திகழ்ந்து வருகிறது. கல்லூரியில் உங்களுக்குள் உருவாக்கக்கூடிய நட்பு எல்லா காலத்திலும் தொடர வேண்டும். கல்லூரி நட்பு என்பது முதியவர் ஆனாலும் நீடிக்க வேண்டும். அது இந்த சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்றார்.
இந்த கல்லூரியை உருவாக்கியவர்கள் இருவரும் நட்பு உறவு கொண்டிருந்தனர். அவர்களின் கனவு மதம், ஜாதி, மொழிகளில் கடந்து அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது அவர்களுடைய கனவும் நிறைவேறியுள்ளது.
இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கடந்த 75 ஆண்டுகளில் இந்த சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர்ந்துள்ளார்கள். மேலும் உயர்ந்த சிந்தனையாளராகளின் தொலைநோக்கு பார்வையை, செயல் வடிவமாக மாற்ற கூடியவர்கள் மாணவர்கள் தான். ஆகையால் மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம். அதுதான் உங்களுடைய நிலையான சொத்து.
இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர்கள் உங்கள் கல்லூரியில் உங்களுக்கு சீனியர், ஆனால் தற்போது என்னுடைய கேபினேட்டில் சீனியர் அமைச்சர்கள் ஆவார்கள். நாளை உங்களில் இருந்து சிலர் இங்கு வரலாம், வரவேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஆகையால் ஒரணியில் தமிழ்நாடு என்று நீங்கள் அனைவரும் நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை ஆனால் மாணவர்களுக்கு நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறேன் என்றார்.
கல்லூரிகள் பல நல்ல தலைவர்களை நாட்டிற்கு தந்துள்ளது. அப்படிப்பட்ட தலைவர் தான் காதர் மொய்தீன் அவருக்கு தகைசால் விருதிணை வழங்குவதில் நானும் தமிழ்நாடு அரசும் பெருமை கொள்கிறது.
திராவிட மாடலில் அரசின் முக்கிய நோக்கம் மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தான். அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக நாம் நினைப்பதுதான் அறிவு செல்வம் மட்டும் தான். ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கிய திட்டம் நான் முதல்வன் திட்டம் ஆகும். மாணவர்களுக்கு கல்விக்கு ஒரு தடையாக பொருளாதாரம் இருக்கக் கூடாது, என்பதற்காக தான் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன், ஆகிய திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் என வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் இருக்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் கல்வியில் மேலோங்கி வர வேண்டும். எப்போதும் இளைஞர்களுக்கு உறுதுணையாக திராவிட மாடல் அரசு இருக்கும் என தெரிவித்தார்.
சமூக நீதி போராட்டத்தின் மூலம் தான் அனைவருக்கும் கல்வி சமமாக கிடைத்தது. சமூக நீதி போராட்டம் தான் நம் அனைவருக்கும் கல்வியை கொடுத்துள்ளது. மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க மாணவர்கள் அனைவரும் ஒரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஓரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும் கல்வியில் மேலோங்க வேண்டும் எப்போதும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உறுதுணையாக இருப்பேன்.
இஸ்லாமிய மக்களின் நலனுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும். கல்வி மட்டும் தான் யாராலும் அழிக்க முடியாத சொத்து. மேலும் இளைஞர்களின் வளர்ச்சிக்காக 20 லட்சம் லேப்டாப்கள் விரைவில் வழங்கப்பட உள்ளோம் என தெரிவித்தார்.
Comments are closed.