இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொஹிதீன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது அமைச்சர் கே.என்.நேரு நேரில் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொஹிதீன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது அமைச்சர் கே.என்.நேரு நேரில் வாழ்த்து

தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொஹிதீன் அவர்களை திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

 

இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் பகிறந்த பதிவில்

 

Bismi

தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் அண்ணன் திரு. கே. எம். காதர் மொஹிதீன் அவர்களை திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து உரையாடினேன்.

 

அப்போது அவரது சமூகப்பணி சிறக்க வாழ்த்தியதோடு, தகைசால் தமிழர் விருந்துக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டேன்.

இந்நிகழ்வின் போது, முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு. காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி மேயர் திரு. அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் திரு. வைரமணி ஆகியோருடன் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர் என்று பதிவிட்டு உள்ளார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்