ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வந்த பக்தர்களுக்கு குடிநீர், காய்ச்சிய பால், பிஸ்கட் கொடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி , ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் சேவை
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வந்த பக்தர்களுக்கு குடிநீர், காய்ச்சிய பால், பிஸ்கட் கொடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி , ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியும், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் நிர்வாகம் மற்றும் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் கல்லூரியின் 35 NSS நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வல மாணவ மாணவிகள் திட்ட அலுவலர்கள் முனைவர் அருண்பிரகாஷ், முத்துக்குமார், மணிவேல் மற்றும் பிரசன்னவனிதா ஆகியோர் தலைமையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று திருவரங்கம் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காய்ச்சிய பால் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்தும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், மூத்தவர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்தனர்.

இவர்கள் சேவையை கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி பாராட்டிசென்றனர்.

Comments are closed.