இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேசுவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி எம்பியுமான ரவூப் ஹக்கீம் பேட்டி.
இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேசுவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி எம்பியுமான ரவூப் ஹக்கீம் பேட்டி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று காலை இலங்கையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்…… இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் இலங்கை வந்தபோது தங்கள் நாட்டு பிரதமரை சந்தித்து இந்திய இலங்கை மீனவர்கள் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தாரே என கேட்டபோது…. எங்கள் வரவு செலவு திட்ட விவாதம் நேற்று ஆரம்பமாகியுள்ளது ஒரு மாதம் முழுவதும் இந்த விவாதம் நடைபெறும். மீனவர்கள் குறித்த விவாதம் நடைபெறுகின்ற நாளில் இது குறித்து எங்கள் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசுவார்கள். இவ்விஷயத்தில் பிரதமரின் பதிலையும் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.
மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது என்பது ஒரு கூட்டுறவின் அடிப்படையில் மீனவர் பிரச்சினைகளை இருதரப்பும் கூட்டாக செய்வதற்கான யோசனையை தான் முன் வைத்திருக்கிறார்கள், இந்த யோசனை தீவிரமாக பரிசீலிக்கப்படுமாக இருந்தால் இரு தரப்பும் அதற்கு உடன்பட இருப்பதாக இருந்தால் இந்த தேவையற்ற பூசல்கள் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம் என நம்புகிறோம்.
மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளதா எனக் கேட்டபோது அது இருநாட்டு அரசுகளை பொருத்த விஷயம் , இருதரப்பு மீனவர்களின் சம்மதத்தை பொருத்த விஷயம் என்றார்.
இதற்கு மீனவர்கள் மத்தியில் ஆதரவு இருக்குமா எனக்கேட்ட போது மீனவர்கள் தரப்பிலிருந்து வருகின்ற கருத்துக்கள் அடிப்படையில் தான் இந்திய அரசியல்வாதிகள் பிரதிபலிக்கிறார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

மேலும் இலங்கையின் வரவு செலவு திட்டம் புதிய அரசினால் 2 வது முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எங்களது நாடு ஒரு மோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு விட்டதற்கான அறிகுறி இந்த வரவு செலவு திட்டத்தில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
நாங்கள் கடன் இருக்க முடியாத ஒரு நாடு என்கின்ற நிலையில் இருந்து எங்களது கடனை கட்டுவதற்கான வருமானம் எங்களுக்கு வந்துவிட்டது என்பதை உலக நாணய நிதியம் அங்கீகரித்து இருப்பதற்கான அடையாளமாகவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல அம்சங்கள் வெளிப்பட்டுள்ளது.
முதல் முறையாக துண்டு விழும் தொகை மிக குறைவாக காணப்படுகிறது என்பதும் நாங்கள் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி விகிதம் அமைந்திருக்கிறது. மைனஸ் 7 சதவீதமாக வீழ்ந்து இருந்த பொருளாதார விகிதம் பிளஸ் 4.5 சதவீதமாக வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
தங்கள் நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் இந்தியா வந்து எங்கள் தலைவர்களை சந்தித்துள்ளாரே எனக்கேட்ட போது…
எதிர்க்கட்சித் தலைவர்களையும், நாட்டின் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களையும் இந்திய அரசு வரவழைத்து அவர்கள் வருவது வழக்கமாகி வந்துள்ளது. இது இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நட்புறவை நல்ல வகையில் பேணுவதற்கு ஆளும் தரப்பு எதிர் தரப்பு இரண்டோடும் நல்ல உறவை பேணுவது இந்திய அரசின் வளமையாக இருந்து வந்துள்ளது. இது எங்களுடைய உறவுகளை வலுப்படுத்துவதற்கான நல்ல முயற்சி அரங்கேறி இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம் என்றார்.


Comments are closed.