கொளறு பாய்ஸ் மற்றும் மஞ்சள் அரிமா சங்கம் சார்பில் ஒன்பதடி விநாயகருக்கு இரண்டாம் நாள் சிறப்பு பூஜை
கொளறு பாய்ஸ் மற்றும் மஞ்சள் அரிமா சங்கம் சார்பில் ஒன்பதடி விநாயகருக்கு இரண்டாம் நாள் சிறப்பு பூஜை

முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்த நாள், ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் நேதாஜி நகர் பகுதியில் சேர்ந்த கொளறு பாய்ஸ் மற்றும் மஞ்சள் அரிமா சங்கம் சார்பில் 9 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுகின்றனர், நேற்று இரண்டாம் நாள் பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

அதனை தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, அப்பகுதியில் உள்ள மக்கள் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததால், கொளறு பாய்ஸ் மற்றும் மஞ்சள் அரிமா சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியவர் ஊர்வலமாகச் சென்று அப்பகுதி மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றனர்.

இரண்டாம் நாளான நேற்று
விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டனர்.

அப்பகுதி மக்கள் வீடுகளில் கொண்டாட்டம்
பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடினர். அப்போது களிமண்ணாலான விநாயகர் சிலைகளை வைத்து, அருகம் புல் சாத்தி, கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.





Comments are closed.