சேவா சங்கம் பள்ளியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – தெற்கு ரயில்வே மேலாளர் பங்கேற்பு!

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே பிரிவு மேலாளர் அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, விளையாட்டு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை நாகம்மை வரவேற்புரை வழங்கினார். தலைவர் சகுந்தலா சீனிவாசன் சிறப்புரை வழங்கினார்.

- Advertisement -

தொடர்ந்து 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சிலம்பம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளை மாணவிகள் செய்து காட்டினர். மூன்று பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த வெற்றியை “ப்ளூ ஹவுஸ்” அணி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மங்கள் & மங்கள் நிறுவனர் மூக்கப்பிள்ளை பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் இந்நிகழ்வில் சேவா சங்கம் நிர்வாகிகளான செயலாளர் சரஸ்வதி, உபத் தலைவர் கமலா பண்டாரி, பொருளாளர் லெட்சுமி சுப்பிரமணியன், பள்ளிகளின் செயலாளர் கீதா கௌரி, இணை செயலாளர் சீதா லெட்சுமி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்