ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு!

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நேற்று இரவு வழக்கம்போல ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை 1.10 மணி அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை புறப்பட்ட பொழுது ரயிலில் இருந்த கடைசி மூன்று பெட்டிகள் எதிர்பாராதவிதமாக கழன்றுள்ளது.

- Advertisement -

இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பெட்டியை இணைத்து 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளது. ஓடும் ரயிலில் இருந்து பெட்டி கழன்று சென்ற சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்