மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம் (NAAS) உறுப்பினர் ஆக தேர்வு.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம் (NAAS) உறுப்பினர் ஆக தேர்வு.

திருநெல்வேலி,டிசம்பர் 3:-

Bismi

இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம்(NAAS) என்பது, இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாகும். மேலும், இது உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை மேம்படுத்த, ஒன்றிய அரசால் நிறுவப்பட்டு, தேசிய நலன்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ள,ஓர் உன்னத அமைப்பும் ஆகும்.இந்த மேன்மைமிகு அமைப்பின் உறுப்பினராக, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் “முனைவர்”எஸ். செந்தில் நாதன் தேரந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர், இப்பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக, தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் அமைந்துள்ள SRI பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். தற்போது அதே துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேளாண்மையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களில் தன்னுடைய சிறந்த ஆய்வுப் பணிகளுக்காகவும், அதே துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், இந்த உயரிய அந்தஸ்து வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப தரம், நிபுணத்துவம் மிக்க 150- க்கும் மேற்பட்ட பார்வைகளைக் கொண்ட சக மதீப்பீட்டர்களால், மதிப்பீடு செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் 700- க்கும் மேற்பட்ட தாம்சன் ராய்டரின் ஒட்டுமொத்த மதிப்பீட்டுக் காரணியையும், பேராசிரியர் செந்தில் நாதனின் ஆய்வு கட்டுரைகள் பெற்றுள்ளன. அவரின் துறை சார் சீரிய ஆராய்ச்சி மற்றும் மேன்மைக்காக அவர் ஆற்றியுள்ள பணிகளுக்கும், இந்த உறுப்பினர் பதவி தக்க சான்றாகும். மேலும் 11150 – க்கும் மேலான மேற்கோள்கள் மற்றும் 61h- index முகைமைகள் கொண்ட 10 மதிப்பாய்வு கட்டுரைகள் போன்றவை, பேராசிரியர் செந்தில் நாதனின் ஆராய்ச்சிகள் சக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணாக்கர்களின் ஆய்வுகளுக்கு முழுமையாக உதவுகிறது என்பது, குறிப்பிடத்தக்கதாகும்.பேராசிரியர் செந்தில் நாதன், இதற்கு முன்பாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் “பாய்ஸ்காட் விருது”, சென்னை அறிவியல் குழுமத்தின் “எப்.ஏ.எஸ் (FAS) விருது”, இந்திய றிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் “இளம் விஞ்ஞானி விருது” உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய தேசிய வேளாண் அறிவியல் மைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் செந்தில் நாதனை, பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ந. சந்திர சேகர், பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ், பேராசிரிய பெருமக்கள், மாணவக்கண்மணிகள், ஆய்வு மாணவ- மாணவிகள் மற்றும் பணியாளர்கள வெகுவாக பாரட்டி, தங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளையும், தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்