செம்பியன்மாதேவி ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
செம்பியன்மாதேவி ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செம்பியன்மாதேவியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி துவங்கி சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ சந்திரசேகர், சிவகாமி அம்பிகைக்கும் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. வசந்த மண்டபத்திற்கு ஸ்ரீ சந்திரசேகர் எழுந்தருளினார், அங்கே சுவாமிக்கும், சிவகாமி அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றதுதொடர்ந்து தேரடி விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சீர் வரிசை ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின் மாலை மாற்றும் வைபோகமும் பின் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், வேதியர்கள் மந்திரம் ஓத சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மந்திர கோஷங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி செய்யப்பட்டது தொடர்ந்து சுவாமிக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்