திருநெல்வேலி வேய்ந்தானகுளம் கரையோரங்களில், பனைவிதைகளை நடவு செய்த, ரோட்டரி சங்கத்தினர்!
திருநெல்வேலி வேய்ந்தானகுளம் கரையோரங்களில், பனைவிதைகளை நடவு செய்த, ரோட்டரி சங்கத்தினர்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்

தலைவர் டாக்டர் இரா. சுகுமார் வழிகாட்டு
தலின்படி, இன்று ( செப்டம்பர். 6)காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள, “வேய்ந்தான்
குளம்” கரையோரப் பகுதிகளில், திருநெல்வேலி “பொருநை” ரோட்டரி சங்கம் சார்பாக, ஒரே நாளில் ஆயிரத்து 100 பனைவிதைகள்
கள் நடப்பட்டன. இந்த
நிகழ்ச்சியில், பொருநை ரோட்டரி சங்கத்
தலைவி சுமதி காந்தி,
பொருளாளர் பவித்ரா கோபிநாத், 3212 ரோட்டரிமாவட்ட, முன்னாள்
ஆளுநர் K. V. ராஜேந்திரன்,
அமுதா ராஜேந்தி
ரன், சுனிதி பாபு மற்றும் மாத்யூ ஆகியோர்

கலந்துகொண்டனர். “வேய்ந்தான்குளம்” தெற்கு கரை
யிலும் , வடக்கு கரையிலுமாக, சாஸ்தா
கோயில் வரையிலும், இவ்வாறு பனைவிதைகள்
நடப்பட்டன. அத்துடன், குளத்தின்
மையப் பகுதி திட்டுகளிலும், நடப்பட்டன. இதற்கான
ஏற்பாடுகளை, வேளாண்மை
ஆசிரியர் ஜெயராமன், புள்ளியியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் “கிரிக்கெட்” மூர்த்தி, சமூக ஆர்வலர்கள்
மலை சுந்தரம், சந்திரன்,
துரை, சந்தனக்குமார் ஆகியோர், மிகச்சிறப்பாக செய்திருந்தனர். மொத்தம் 10ஆயிரம் பனை விதைகளை நடுவதற்குத் திட்டமிட்டதில்,
இதுவரையிலும் ஆயிரத்து 800 பனை விதைகள் நடப்
பட்டுள்ளன தொடர்ந்து
இப்பணிகள் நடைபெறும்! என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.





Comments are closed.